Web Analytics Made Easy -
StatCounter

பத்திரப்பதிவுத் துறை சேவை முடக்கம்!

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையின் இணையதள சேவை முடங்கியது. பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.  

SI தேர்வு தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.    

தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!!

வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.    

மொழிபெயர்ப்பு வசதி விரைவில் அறிமுகம்!!

Facebook-இல் இருக்கும் மொழிபெயர்ப்பு வசதியை விரைவில் WhatsApp-லும் அறிமுகப்படுத்த இருப்பதாக மெட்டா அறிவித்துள்ளது. Long Press செய்வதன் மூலம் மெசேஜுகளை மொழிபெயர்க்க முடியும். விரும்பும் மொழியை பதிவிறக்கம் செய்தால், ஆஃப்லைனிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய வசதி விரைவில் பயன்பாட்டுக்கு…

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு. டிக்கெட் வெளியீட்டுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்