Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலர் இடமாற்றம்!

கலசபாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த திரு. M. இனியன் அவர்கள், தற்போது காந்தபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.57.50 குறைந்து ரூ.1,823.50க்கு விற்பனை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தொழில் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு மின்கட்டணம் உயர்வு!!

தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

ஆதார் இல்லையா?… டிக்கெட் இல்லை!

நாளை (ஜூலை 01) முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நமது கலசபாக்கத்தில் ஒரு புதிய தொடக்கம்!!

ஸ்ரீ வேலு எலக்ட்ரிக்கல்ஸ் & பிர்லா பெயிண்ட்ஸ்.. இனிமேல் உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு தேவையான அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் வண்ணங்களான பெயிண்ட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும்! முகவரி : மேல்தெரு, கலசபாக்கம்…

வாட்டர் பெல்!

காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

11ம் வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 30ல் வெளியீடு!

11ம் வகுப்பு விடைத்தாள் மறு மதிப்பீடு முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியீடு. விண்ணப்பித்தோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை பெறலாம்.  

சிறப்பு கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், இத்தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (27.06.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு திரௌபதி அம்மன் கோவில் அருகில் நடைபெறுகிறது.

அனுமதி இல்லா மனைவசதிக்கு ஜூலை 1 முதல் ஆன்லைன் பதிவு ஆரம்பம்!!

அனுமதி அற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மலையிடப் பகுதிகளுக்கான விண்ணப்பங்களும் அதேதளத்தில் 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.    

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா!!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா ஆனி 23ஆம் நாள் – 07.07 2025 – திங்கள்கிழமை, காலை 9.00-10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

காரப்பட்டு பகுதிகளில் நாளை (26.06.2025 ) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அருகே காரப்பட்டு துணைமின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். (மாற்றத்துக்கு உட்பட்டது)…

வேலூரில் உயர் சிறப்பு மருத்துவமனை!!

வேலூரில் அரசு உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்தார் முதலவர் ஸ்டாலின். 7 தளங்களுடன் 562 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.