Web Analytics Made Easy -
StatCounter

பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.முருகேஷ் அறிவித்துள்ளார்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 29-ல் தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும்…

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று (24.05.2023) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கேட்டவரம்பாளையம் உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கேட்டவரம்பாளையம் உள் வட்டம் வீரளூர், மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், காந்தப்பாளையம், சீனந்தல், தேவராயன்பாளையம், ஆதமங்கலம், கெங்கவரம், கிடாம்பாளையம், கேட்டவரம்பாளையம்-1,…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் கடலாடி உள் வட்டம் கடலாடி1, கடலாடி2 ,கீழ்பாலூர், மேல்பாலூர்,மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,எர்ணமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வாராயநல்லூர், கச்சேரிமங்கலம்…

திருப்பதி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 24-ம் தேதி வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து…

அண்ணாமலையார் திருக்கோவிலில் வைகாசி மாத மகா அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் வைகாசி மாத மகா அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!

கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று (20.05.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.

10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டல் விண்ணப்பத்திற்கான தேதி அறிவிப்பு!

பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே-26 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 மற்றும் 11-ஆம் வகுப்பு தேர்வு மறு கூட்டலுக்கு மே-24 முதல் மே-27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும். மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை திருநாளான இன்று(19.05.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

தென்பள்ளிப்பட்டு மதுரா, மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கும் திருவிழா!

கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் ஏரிக்கரையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு நிகழும் சோபகிருது வருடம், வைகாசி மாதம் 08 ஆம் தேதி, (22.05.2023) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில்…