Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

இன்று மார்கழி 1 (16.12.2022) வெள்ளிக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருகின்றார்கள். இன்று மார்கழி முதல் நாள் அதிகாலை முதல் பக்தர்கள் பருவதமலை கிரிவலப் பாதையில்…

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் : அன்னதானம் செய்ய ஏற்பாடு!

மார்கழி 1ஆம் நாள் பருவதமலை கிரிவலம் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதில்…

உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

கிராம ஊராட்சிகளுக்கு ₹5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு ₹25 லட்சம் வரையிலும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ₹50 லட்சம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது!

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு -பொதுமக்கள் எச்சரிக்கை!

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் செய்யாற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகின்றது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். குழந்தைகளை ஆற்றுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்பதை…

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் இணையத்தளம் மூலம் மழை வரும் தகவலை தெரிந்துகொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கணினியில் www.windy.com என்ற இணையத்தளத்தின் மூலம் எந்த நாட்கள், எந்த நேரங்களில் மழை வரும் என்ற தகவலை ஆராய்ந்து கற்றுக்கொண்டனர்.

கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது மழை!

கலசபாக்கம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது கலசபாக்கம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மிதமான…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணை தொடர் மழையின் காரணமாக இன்று திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையில் தற்போது நீர்மட்டம் 20.34 அடி உள்ள நிலையில் தொடர் மழையின் காரணமாக அணை இன்று திறப்பு.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சங்கர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் மகா கும்பாபிஷேக திருவிழா!

கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத சிம்மேஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக திருவிழா விழா நேற்று (12.12.2022) சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

உழவர் களஞ்சியம் 2022 – வேலூர்

வேளாண் பெருமக்களே வருக! வருக! நாள் : 14, 15 டிசம்பர் 2022 இடம்: விஐடி வளாகம்,வேலூர் நேரம்: காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை தொடர்பு முகவரி: பேராசிரியர் மற்றும்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு நான்காம் நாள் 10.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு மூன்றாம் நாள் 09.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் (முருகப்பெருமான்) தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு இரண்டாம் நாள் 08.12.2022 (வியாழக்கிழமை) அன்று , அதிகாலை உண்ணாமுலை உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கிரிப்பிரதக்ஷ்ணம் நடைபெற்று இரவு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு முதல் நாள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று , அய்யங்குளத்தில் சந்திரசேகரர்  தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கம் கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செங்கம் கோட்டத்திற்குட்பட்ட வீட்டு மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்பு…

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம்!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த நிலையில் இன்று (08.12.2022) அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கிரிவலம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவான 06.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று  அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6:00 மணி அளவில் மகா தீபம்…