Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை!

ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று 75வது சுதந்திர தினத்தை அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நமது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துமாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை…

நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா?

Business Vedas 2 days in Tamil நீங்கள் தொழில் முனைவோரா? உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டுமா? உங்கள் தொழில் இலக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தொழில் திறனை வளர்த்துக் கொள்ள…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 3!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா மூன்றாம்  நாள் நேற்று (04.08.2022) வியாழக்கிழமை பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.

கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது மழை!

கலசபாக்கத்தில் தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

கனமழையின் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் வெள்ளம்!

செங்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளம். இதன் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகின்றது.

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா Day 2!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள் நேற்று (03.08.2022) புதன்கிழமை நாக வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்க்கை நடைபெற்றது.

கலசபாக்கத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர் வாரும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர் வாரும் பணி ஊராட்சி மன்ற தலைவர் பவுனு வெள்ளிகண்ணு மூலம் நடைபெறுகிறது .

கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.

அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில்…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள்!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள் நேற்று (02.08.2022) கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.

மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்:யுஜிசி உத்தரவு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் நேற்று(01.08.2022) இரவு பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்தில் மாடவீதி உலா வந்தும் இரவு பக்தர்கள் பூ மிதித்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் 10 ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் மற்றும் பூஜைகள்…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் நேற்று (01.08.2022) ஆடிப்பூரம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை முடிந்த பிறகு வளைகாப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முருகேஷ் இ.ஆ.ப.…

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (01.08.2022) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனையும் நடைபெற்றது.

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை!

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக இன்று (02.08.2022) செய்யாற்றில் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.

திருப்பதி தேவஸ்தானத்தில் வரலாறு காணாத வசூல்!

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 31 நாட்களில் ( ஒரு மாதத்தில்) ஏழுமலையான் கோவில் உண்டியலில் 139 கோடியே 45 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் பிரமோற்சவ விழா நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் தேதி (02.08.2022) செவ்வாய்கிழமை காலை…