Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (13.06.2022) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன

கலசபாக்கம் பள்ளிகளில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நிலையில் தூய்மை பணி !

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமை தொடக்கப்பள்ளியில் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளி திறக்கும் நிலையில் … 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிகள் தூய்மைபடுத்தும்…

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI தேர்வுக்கான Hall Ticket வெளியிட்டது!

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI வேலைக்கான அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து…

கலசபாக்கம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது. இன்று (10.06.2022) வெள்ளிக்கிழமை, இந்த வாரம் பல காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக்காய், தக்காளி, நிலக்கடலை போன்ற பல பொருட்கள் வணிகர்கள் விற்பனை செய்தனர்.  கலசபாக்கம்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக திரு.கார்த்திகேயன் அவர்கள் பொறுப்பேற்றார்!

இன்று (10.06.2022) திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இவர் மருத்துவ துறையில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பற்றிய விவரம்!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு (100 நாள் வேலை) மூலம் பயன்பெறும் மக்கள் தங்களுடைய 100 நாள் அட்டையின் முழு விவரங்களை https://nrega.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் தாங்களே தெரிந்து கொள்ளலாம். உங்கள்…

ஜூன் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

ஜூன் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி…

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில் 8,106 காலிப்பணியிடங்கள்!

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில்(Institute of Banking Personnel Selection-IBPS) 8,106 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி:  CA, B.Sc., MBA வயது வரம்பு (01-06-2022…

கலசபாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவி ச.தான்யஸ்ரீ-யை கலசபாக்கம்.காம் வாழ்த்துகிறது!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவி ச.தான்யஸ்ரீ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் வரைபடம் 06.06.2022 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. அவருக்கு நம் கலசபாக்கம்.காம் சார்பாக வாழ்த்துக்களை…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என தகவல்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொடர்ந்து LKG, UKG வகுப்புகள் செயல்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாரத்நெட் 2-ஆம் கட்ட திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ரூ. 1, 627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.

கல்வி, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான கடனுதவி பெற புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம்!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டது சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது…

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியீட்டுள்ளது. மேலும் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உங்கள்…

2022-23 ஆண்டின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்!

பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்யவும் பள்ளிகல்வித்துறை ஏற்பாடு…

அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 815 பேருந்துகளில் விளம்பரம் செய்ய கோரப்பட்டுள்ள ரூ.88 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம். வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம்…

தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் நிரப்பப்படும்!

தமிழகத்தில் மொத்தம் 1.75 லட்சம் பணியிடங்கள் உள்ளதாக கணக்கீடு. இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு…

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு!

• 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு. • 10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிவடையும் எனவும் அறிவிப்பு. • 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்…

தமிழகத்தில் ஜூன் 10 முதல் மாவட்ட வாரியாக செஸ் போட்டி!

ஒலிம்பியாட் தொடரை ஒட்டி ஜூன் 10 முதல் 20 வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டி நடைபெறுகிறது அகில இந்திய கூட்டமைப்பும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players…

11 வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என அறிவிப்பு!

11 வது உலக தமிழ் மாநாடு 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சார்ஜாவில் நடைபெறும் என உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.  

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாளை (09-06-2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register…