செய்யாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு : கலசபாக்கம் பகுதி கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கலசபாக்கம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பழங்கோயில், பில்லூர், மேட்டுப்பாளையம், அணியாலை, காம்பட்டு, பத்தியவாடி, தென்மகாதேவ மங்கலம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.