Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மகாதீபம்: 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.    

கிராம சபை கூட்டம்!!

கலசபாக்கம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பர் 1, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வுகள் 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 வரை, 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும். முழு அட்டவணை cbse.gov.in-ல் கிடைக்கும்.

ஐப்பசி மாத கிரிவலம்!

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம், 04ம் தேதி (செவ்வாய்) இரவு 9:37 மணிக்கு தொடங்கி, 05ம் தேதி (புதன்) இரவு 7:20 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி…

தரவரிசை பட்டியல் வெளியீடு!

ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள், மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவம்பர் 7க்குள் ஓடிஆர் (One Time Registration) மூலம் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நடைபெறும். வீட்டு பட்டியல் மற்றும் சுய கணக்கெடுப்பு நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடக்கம்!

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி. நவம்பர் 1 முதல் முன்பதிவு தொடக்கம். 70,000 பேர் ஆன்லைனிலும், 20,000 பேர் ஸ்பாட் புக்கிங்கிலும் முன்பதிவு செய்யலாம்.

சாட்ஜிபிடி ஓராண்டு இலவசம் – ஓபன் ஏ.ஐ. அறிவிப்பு!

நவம்பர் 4 முதல், சாட்ஜிபிடி செயலி இந்தியர்களுக்கு ஓராண்டு இலவசமாக வழங்கப்படும் என்று ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (28.10.2025) வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.