Web Analytics Made Easy -
StatCounter

மார்ச் – சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு!

மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

பிறப்புச்சான்று மட்டுமே ஆதாரம்!

கடந்த 2023ம் ஆண்டு அக்.,1 தேதிக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு, பிறப்புச்சான்று மட்டுமே, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய தென் மண்டல வானிலை தலைவர் நாளை பொறுப்பேற்பு!!

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக திருமதி. அமுதா நாளை பொறுப்பேற்கிறார்.    

CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1 வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.    

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலை மாடவீதியில் வசிப்போருக்கான வாகனப் பாஸ் பெற தேவையான ஆவணங்கள்!!

மாடவீதியில் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் வாகன பாஸ் பெறுவதற்கு விண்ணப்ப படிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை, பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று, காப்பு சான்று, புகைச் சான்று…

பிப்ரவரி 28, மார்ச் 1 – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வார இறுதி நாட்கள் ஆன பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு…

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 31ஆம் ஆண்டு மகாசிவராத்திரி அலகு குத்தும் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (27.02.2025) அலகு குத்தும் திருவிழா…

ஜி.எச்., ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.    

மகாத்மா காந்தி வேலை திட்டத்துக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிப்பு!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு    

கலசபாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலையம் திறப்பு விழா!

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் நேற்று (27.02.2025) திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.…

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு இனி 2 பொதுத்தேர்வு நடப்பு!

கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு +2 பொதுத்தேர்வு நடைபெறும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு .

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-02-2025) மாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். 

மல்லிக மொட்டு மனச தொட்டு!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!

இந்திய ரயில்வேயில் குரூப் D பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிப்பு.  மொத்தமுள்ள 32,438 பணியிடங்களில், சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த வேலைவாய்ப்புக்கு, அடிப்படையாக ரூ 18,000 அறிவிக்கப்பட்டுள்ளது.…