Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி நடக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடு.  

பத்திரப்பதிவுத் துறை சேவை முடக்கம்!

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையின் இணையதள சேவை முடங்கியது. பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.  

SI தேர்வு தேதி அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் (SI) தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.    

தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு!!

வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவுவிட்டுள்ளது.