Web Analytics Made Easy -
StatCounter

காரப்பட்டு பகுதிகளில் இன்று (24.10.2024 ) மின் நிறுத்தம்!

இன்று (24.10.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி,…

மிருகண்டாநதி அணையில் 61.61 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.20 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!!

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதால் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.திரு. இனியன் தகவல், கிராம நிர்வாக அலுவலர், கலசபாக்கம்

15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடக்கம்!

தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு அறிமுகம். தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது; சுமார் 3.8 கிலோ எடையில்…

தீபாவளிக்கு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.அக்.28 முதல் 30 வரை சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துள் இயக்கம்; தீபாவளிக்கு பிறகு சென்னை திரும்ப வசதியாக 9,441 சிறப்பு பேருந்துகள்…

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று மிக கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. -சென்னை…

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – அரசாணை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.247 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை 2023- 24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை; மாநில…

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கத்தில் அதிக மழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கம் பகுதியில் 166.00 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு!!

மிருகண்கண்ட அணையில் இருந்து உபரி நீர் நேற்று இரவு திறக்கப்பட்டதால் மற்றும் கலசப்பாக்கம், எர்ணமங்கலம், அருணகிரிமங்கலம், எலத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின் நிறுத்தம் ரத்து!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று (18.10.2024) வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.