Web Analytics Made Easy -
StatCounter

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு. டிக்கெட் வெளியீட்டுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்படும் என தகவல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (24.09.2025) காலை 6:00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை…

H1B விசா கட்டணம் – டாக்டர்களுக்கு விலக்கு!!

அமெரிக்காவில் H1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் விலக்கு என அறிவித்துள்ளது.    

புதிய நடைமுறை அமல்!

வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் பிப் கணக்கில் ஆண்டுக்கு 6 முறை பணம் எடுக்கும் புதிய நடைமுறை அமலானது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.    

திருவண்ணாமலை – காட்பாடி ரயில் சேவையில் மாற்றம்!

செப்டம்பர் 26 அன்று, கன்னியாகுமரி – ஐதராபாத் ரயில் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக இயங்கும். நிலையங்கள்: அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிறுத்தப்படும்.

ஜிஎஸ்டி 2.0 – அமலுக்கு வந்தது!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி 12, 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு நடைமுறைக்கு வந்தது.

ஆவின் பால்பொருட்கள் விலை குறைப்பு!

ஆவின் நிறுவனம் தனது பால்பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து பன்னீர், நெய் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று (22.09.2025) முதல் அமலில் வருகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.    

கலசபாக்கத்தில் நேற்று 47.06 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

கலசபாக்கத்தில் நேற்று (21.09.2025) பெய்த மழையின் அளவு 47.06 மில்லி மீட்டராக பதிவு.  

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19-09-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.