Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்-2023 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் உணவு மற்றும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.செங்கம் ரோட்டில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள்…

கலசபாக்கம் நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

கலசபாக்கத்தில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நூலகர் திரு.குமார் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.…

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (14.11.2023) 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வு தேதி www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

கலசபாக்கத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை!

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று(14.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் அவர்கள் விடுமுறை அளித்துள்ளார்.

கலசபாக்கம் அடுத்த வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுத்துடன் தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் உள்ள ஒன்பது கோபுரங்கள் ஒளி விளக்குகளால் மின்னுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசை!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 ) ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா ஐப்பசி 28 -ம் தேதி (14.11.2023 ) நாளை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை…

கலசபாக்கத்தில் தேசிய நூலக வார விழா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் (14.11.2023) அன்று நடைபெறும்!

கலசபாக்கம் நூலக வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக வார விழா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் (14.11.2023) செவ்வாய்கிழமை அன்று காலை 10:00 மணி அளவில் ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டு…

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு துண்டு பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு மின் பாதுகாக்கும் வழிமுறைகளை…

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிப்பு.

ருத்ரா பட்டாசு கடை..!

பட்டாசுகள் தரமானதாகவும், மிகக்குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும். அனைத்து நாட்களிலும் பட்டாசு கிடைக்கும். முகவரி: (அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்) பஜார் வீதி, கலசபாக்கம். தொடர்புக்கு: 8122240048, 8838111286