Web Analytics Made Easy -
StatCounter
Tiruvannamalai Girivalam

திருவண்ணாமலையில் மாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி வரும் 06.03.2023 திங்கட்கிழமை அன்று மாலை 05.08 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை 06.45 மணிக்கு…

வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மின் நிறுத்தம்!

வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி மற்றும்  திருசூரை சுற்றியுள்ள கிராமங்களில் (மாற்றத்துக்கு உட்பட்டது)…

கலசபாக்கம் அருகே 27 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவ தேர் சீரமைப்பு!

கலசப்பாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு!

11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை மார்ச் 3-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடக்கம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று  (மார்ச் 1) முதல் வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் நேற்று (27.02.2023)  நடைபெற்ற சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ்…

கலசபாக்கம் நூலகத்தில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம்!

இன்று உலக தாய்மொழி தினம் கலசபாக்கம் நூலகர் வட்டம் சார்பில் கோ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலகர் குமார், மீனாட்சிசுந்தரம், ராஜேந்திரன், ரஞ்சித், பெண்கள் இணைப்பு குழு பவானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (20.02.2023)…

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (20.02.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு…

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் 29 ஆம் ஆண்டு அலகு குத்தும் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த பழங்கோயில் கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 29 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி மாசி மாத அமாவாசை நாளான இன்று (20.02.2023) அலகு குத்தும் திருவிழா…

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் இன்று (பிப்ரவரி 20) முதல் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் மாசி அமாவாசை மயானக்கொல்லை திருவிழா!

 மாசி அமாவாசை மயானக்கொள்ளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருள்மிகு அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லிங்கோத்பவருக்கு அபிஷேகம்!

சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையாருக்கு லட்சார்ச்சனை!

 திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் அண்ணாமலையாருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சன்னதி அருகே பக்தர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டது.