Web Analytics Made Easy -
StatCounter

நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

திட்டமிட்டபடி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது . அதன்படி, பொதுத்தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்குத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு…

கலசபாக்கம் பகுதியில் போட்டோ & பிரேம் ஒர்க்ஸ் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை!

கலசபாக்கம் பகுதியில் போட்டோ & பிரேம் ஒர்க்ஸ் கடையில் பணிபுரிய ஆட்கள் தேவை தகுதி : எழுத படிக்க தெரிந்தவர்கள் இடம் : கலசபாக்கம் தொடர்புக்கு : 9043567232

பனை கனவுத் திருவிழா – 2022

பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 அக்ரி இணைந்து நடத்தும் பனை கனவு திருவிழா வரும் ஜூன் 18 மற்றும் 19 -ஆம் நாள் நடைபெறுகிறது. இடம் : பனங்காடு, நரசிங்கனூர் கிராமம், வெம்பி அஞ்சல்,…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை (16.06.2022) வியாழக்கிழமை காலூர், பத்தியவாடி, சாலையனூர், ஆனைவாடி, கரையாம்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல்!

கலசபாக்கத்தில் உள்ள நூலக வாசகர் வட்டம் சார்பில் நூல் அறிமுகத்தின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அறிமுகத்தின் நூல் :  பொருட்களின் கதை ஆசிரியர் :  ஆனி லியோனார்டு தலைமை :  அ.குமார் நூல் அறிமுக உரை…

முதல் தனியார் ரயில் சேவை இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்!

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை இன்று மலை 6:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த சிறப்பு ரயில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில்…

பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் பற்றிய விவரம்!

இசைக்கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் பொருட்டும், இளைய சமுதாயத்தினரிடையே இசைக்கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், மாணவர்களை புகழ்மிக்க இசைக்கலைஞர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட இசைப்பள்ளிகள் இயக்கி வருகின்றன. மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு…

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியை திரு.தயாளன் அவர்கள் ஆய்வு செய்தார்!

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமைத் தொடக்கப்பள்ளியில் நேற்று (13-06-2022) மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்ய மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் திரு. தயாளன் அவர்கள் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்தார். உடன் பள்ளியின்…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு!

ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுமுறைக்கு பிறகு பள்ளி வந்த மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளை மகிழ்வுடன் வரவேற்கும் விதமாக கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

குழந்தைகளுக்காக இந்த வாரம் Google Search பற்றிய பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் Google Search பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

கலசபாக்கம் பழங்கோயில் பலக்ராதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் கோயிலில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் சீரமைக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும்…

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை பாடப்புத்தகமும் வழங்கப்பட்டது!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 2022-2023 கல்விஆண்டிற்கான புதியமாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மற்றும் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. ஊராட்சிமன்றதலைவர் திருமதி. புவனேஷ்வரிபுகழேந்தி அவர்களும், ஒன்றியதுணைசேர்மன் திரு. பாலசுப்பிரமணியன் அவர்களும், பள்ளிமேலாண்மைக்குழுதலைவர் நதியா…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (13.06.2022) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன

கலசபாக்கம் பள்ளிகளில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நிலையில் தூய்மை பணி !

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றல் இனிமை தொடக்கப்பள்ளியில் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளி திறக்கும் நிலையில் … 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பள்ளிகள் தூய்மைபடுத்தும்…

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI தேர்வுக்கான Hall Ticket வெளியிட்டது!

தமிழ் நாடு காவல் துறை TNUSRB SI வேலைக்கான அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து…

கலசபாக்கம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது. இன்று (10.06.2022) வெள்ளிக்கிழமை, இந்த வாரம் பல காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக்காய், தக்காளி, நிலக்கடலை போன்ற பல பொருட்கள் வணிகர்கள் விற்பனை செய்தனர்.  கலசபாக்கம்…

திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக திரு.கார்த்திகேயன் அவர்கள் பொறுப்பேற்றார்!

இன்று (10.06.2022) திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இவர் மருத்துவ துறையில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பற்றிய விவரம்!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு (100 நாள் வேலை) மூலம் பயன்பெறும் மக்கள் தங்களுடைய 100 நாள் அட்டையின் முழு விவரங்களை https://nrega.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் தாங்களே தெரிந்து கொள்ளலாம். உங்கள்…