Web Analytics Made Easy -
StatCounter

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

திருவண்ணாமலையில், பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி…

பேருந்துகளின் இயக்கம் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு!

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151,…

தமிழகத்தில் நாளை (08.01.2022) முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி? – மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் – பெட்ரோல் பங்குகள் செயல்படும் – புறநகர் ரயில் சேவை செயல்படும் – திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன்…

பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்

போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…

கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் இன்று 07-01-2022 மாலை 4.45 மணியளவில், கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த தமிழக அரசின்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…

வாரந்தோறும் பரிசு மழை: கடிகாரம் (Clock) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச கடிகாரம் (Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திரு. லக்ஷ்மணன் – பில்லூர் திரு.வெங்கடேசன் – கலசபாக்கம் திருமதி.ருத்ரா- கலசபாக்கம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு…

இயற்கையை போற்றும்…. பொங்கல் விழா !

சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:- திரு.பானுமூர்த்தி – துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்) திரு மோகன் – ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்) தர்மலிங்கம் – படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்)…

வெங்கட்டம்பாளையம் கிராமம் மாரியம்மன் கோவில் வளாகம் “வான் உலா” நிகழ்ச்சி!

இன்று (06-01-2022) மாலை 4.00 மணி அளவில் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகம் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் வான் உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது வானில் சில கிரகங்களை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. மூலவர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதி…

வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை

ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை

சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை! அதில் இளைஞர்கள் மீன் பிடித்து விளையாடினர்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும். – அமைச்சர் அன்பில் மகேஷ்

கலசபாக்கத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று (02-01-2022) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அமாவாசை தேய்பிறை பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி

10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு…

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 31 டிசம்பர் 2021

இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…

பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு – முழு விவரம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…

மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்வசம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை

கலசபாக்கம்.காம்-ல் பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் அலுவலக ஊழியர்களுக்கு பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.