Web Analytics Made Easy -
StatCounter

மருத்துவ காப்பீடு முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி மையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டைக்கான இன்று முகாம் நடைபெற்று வருகின்றது. செயல்பாட்டு செலவு ரூ.80/- மட்டுமே. ஆவணங்கள்: ஆதார், குடும்ப அட்டை, கைபேசி எண்.

இலவச யோகா!

இன்று ஜூலை 17–19, மாலை 5.30-8.30 வரை, கலசபாக்கம் சொர்க்கநாராயண பெருமாள் கோவிலில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தும் யோகா, பிராணாயாமம், தியான நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். தொடர்பு: 98650 60974, 81489…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (17.07.2025) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.    

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு சேவைகள் வீடு தேடி செல்லும் இந்த திட்டத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.…

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல்…

மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.    

சபரிமலை கோயில் நடை திறப்பு!!

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை (16-ம் தேதி) திறப்பு. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.    

குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு.