Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் பனிச்சாரல் மழை பொழிவு!

கலசபாக்கம் பகுதியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தற்பொழுது பனிச்சாரல் மழை பெய்து வருகிறது.காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (16.12.2023 ) மற்றும் நாளை மறுநாள் (17.12.2023 ) ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin’ செய்து வைக்கலாம்!

வாட்ஸ்அப்-ல் பயனர்கள் தங்களது தனிப்பட்ட சேட்கள் மற்றும் குரூப்களில் பெறும் முக்கியமான மெசேஜ்களை ‘Pin’ செய்து வைக்கும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை மூலம் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா 2023 அரங்குகளை மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் பார்வையிட்டார்.

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு பழனி கோயில் நடை திறப்பு!

மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி பழனி மலைக்கோயிலில் வரும் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.

வங்கி லாக்கரை புதுப்பிக்க டிச.31 கடைசி நாள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31, 2022 ஆம் ஆண்டிற்கு முன்பு வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை வங்கியில் சமர்ப்பித்திருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வங்கியில் ஒப்படைக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை தேதி பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவிப்பு!

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 – ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது. விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2 -ம் தேதி திறக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறுதானிய உணவு திருவிழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (15.12.2023) காலை 10 மணியளவில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறுகின்றது.

திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று (14.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் மற்றும் எம்.எல்.ஏ திரு. பெ.சு.தி.சரவணன் தலைமையில் ஆய்வு.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு!

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவின்…

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று (13.12.2023) 81,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 79,996 ஆக உள்ளது.

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை!

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. 14.12.2023 தேதி முதல் 20.12.2023 தேதி வரை கோயிலுக்கு செல்ல பக்தர்கள் படிவழியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என…

முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (14.12.2023 ) சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (14.12.2023 ) சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக கூடுதலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று (13.12.2023 ) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்!

தமிழகம் முழுவதும் இன்று (13.12.2023 ) 1 முதல் 12 – ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வானது நடைபெற்று வருகின்றது.