Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்‌ தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்து துறை உயர்‌ அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌,  அவர்கள் தலைமையில்‌…

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ. 3.20 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்…

நவம்பர் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!

நவம்பர் மாதத்திற்கான (ஐப்பசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 04.15 மணிக்கு தொடங்கி மறுநாள்(08.11.2022) செவ்வாய்கிழமை மாலை 04.31 மணிக்கு நிறைவடைகிறது.

கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வீட்டுமனை விற்பனைக்கு!

போளூர் to திருவண்ணாமலை நெடுஞ்சாலையின் அருகில் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம் இந்தியன் வங்கி அருகில் 30*54= 1620 அடியில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது. வீட்டுமனை சிறப்பம்சங்கள்: இங்கு குடிநீர் வசதி,…

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் பலக்ராதீஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்!

உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ…

திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோயில் நவ.7 ஆம் தேதி நடை அடைப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார்‌ கோவிலில்‌ (07.11.2022) அன்று அன்னாபிஷேகம்‌ நடைபெறுவதால்‌ அன்று பிற்பகல்‌ 3 மணி முதல்‌ மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. நவம்பர் 7 மற்றும் 8 ஆம் நாளில்…

நவம்பர் 8 ஆம் தேதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8 ஆம் தேதி மதியம் 2: 39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கின்றது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (8.11.2022) அன்று காலை 8: 40 மணியில் இருந்து இரவு…

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து குறைவு!

கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து தற்போது குறைந்து செல்கின்றது. மிருகண்டா அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரை சுற்று வட்டார கிராமங்களின் ஏரிகளில் நிரம்ப செய்து வருகின்றார்கள்.

கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் பலவகையான மரபு அரிசி வகைகள், குள்ளங்கார், இரஸ்தாலி, உள்ளிட்ட கார்த்தி பட்டத்திற்கு ஏற்ற விதை நெல் காய்கறி வகைகள் கொத்தமல்லி,…

புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

  புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற நவம்பர் 11ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடக்கம்!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை புதுப்பிப்பதற்காக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் புதிய வழிகாட்டுதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் Online Application விரைவில் வெளியிடப்படும் என்ற அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சட்டப்படியான…

அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம் மற்றும் இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நெய் காணிக்கை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவு.

ஏழாம் நாள் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சூரனை வதம் செய்யப்பட்ட பின் ஏழாம் நாளான…

கலசபாக்கத்தில் குடிநீர் செல்லும் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டது

கலசபாக்கம் பகுதியில் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பவுன் வெள்ளிக்கண்ணன் அவர்கள் மூலம் உடைந்த குழாய் நேற்று சரி செய்யப்பட்டது.

குருவிமலையில் இருந்து கலசபாக்கம் வழியாக சிவசுப்பிரமணிய சுவாமி நட்சத்திர கோவிலுக்கு புறப்பட்டார்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு (30.10.2022) ஞாயிற்று கிழமை…

கலசபாக்கத்தில் தற்போது இடைவிடாது மழை!

  கலசபாக்கத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 10 மணியளவில் மழையானது தொடங்கி இதுவரை மழை விடாமல் பெய்து வருகின்றது.

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி!

கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி…

கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து 65 கன அடி தண்ணீர் திறப்பு!

கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்ட அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து சுமார் 40 கன அடி தண்ணீர்…