Web Analytics Made Easy -
StatCounter

1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிக்க திட்டம் !

1 முதல் 8-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் https://tnmedicalselection.net https://tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் இன்று மாலை வெளியீடு.

திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் !

திருவண்ணாமலை நகரில் மத்தியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனமஹா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் கடந்த சனிக்கிழமை (23.01.2022 ) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

விதைப்பந்துகள் விதைக்கப்பட்டன !

JB Farm ல் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகள் இன்று கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த குழந்தைகளால் சாலை மற்றும் ஆற்று ஓரங்களில் விதைக்கப்பட்டது.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு !

கலசபாக்கம்.காம் மற்றும் JB Soft System அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு அறிமுக பயிற்சியுடன் கூடிய வாராந்திர கூட்டம்.

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் !

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 2-வது தவணை காலம் கடந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை !

“அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை”. – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-01-2022) கொரானா தடுப்பூசி முகாம்!

அன்பிற்குரிய கலசபாக்கம் கிராம பொது மக்களுக்கு, நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-01-2022) கொரானா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த முகாமில் சென்று செலுத்திக்…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழக அரசு !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் (23.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். – தமிழக அரசு அறிவிப்பு

5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை – மத்திய அரசு!

ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 6-11 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாக மாஸ்க் அணியலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த முடிவு – அமைச்சர் பொன்முடி!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 01-ம் தேதி தொடங்கும் எனவும்,…

வாரந்தோறும் பரிசு மழை: ப்ளாஸ்டிக் பக்கெட்(Plastic Bucket) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு ப்ளாஸ்டிக் பக்கெட்(Plastic Bucket) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திரு.காதர் – கலசபாக்கம் திருமதி.மாலதி – கலசபாக்கம் திரு.வேல்முருகன் – மேல்சிறுவள்ளூர் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ‘நாயுடுமங்கலம் சாரதா…

ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (20.01.2021) நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமேசான் நிறுவனத்தின் கல்வி உதவி தொகை!

அமேசான் நிறுவனம், முதலாம் ஆண்டு CSE/IT படிக்கும் இந்திய குடிமகன்களுக்கு ₹1,60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை.…

மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு!

டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி…

இந்த வார பரிசுப்போட்டி: காப்பர் பாட்டம் கடாய்(SS Copper Bottom Kadai) வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 20 முதல் ஜனவரி 26 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு காப்பர்…

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்!

கரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே, எளிமையாக தீர்த்தவாரி நடைபெற்றது!

2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு…

கலசபாக்கம் பகுதியில் இன்று புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகைகள்!

தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், நமது கலசபாக்கம் பகுதியில் இன்று புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகைகள்..இந்த வழிகாட்டி பலகையில், அருகே உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் இடங்களின் விவரங்களும் உள்ளது.

ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை (20.01.2021) நடைபெறுகின்றது.

பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை: வெறிச்சோடியது கிரிவலப்பாதை!

கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள்…

இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்!

2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்.…