திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 2026 ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
திருவண்ணாமலை தை மாத கிரிவலப் பௌர்ணமி பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4:45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை…
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்!
திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி இந்த ஆண்டு தை 5 ஆம் தேதி (19.01.2026) திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திர சேகர் எழுந்தருளி தீர்த்தவாரி…
கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (18.01.2026) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (25.01.2026) ஞாயிற்றுக்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
திருவூடல் நிறைவடைந்து கிரிவலம் வந்த அண்ணாமலையார்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்!
மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இந்த புனித நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…
கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் திருவூடல் நிகழ்ச்சி!
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் இன்று தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருமாமுடீஸ்வரர் திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.இதனைத் தொடர்ந்து சன்னதி…
கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் பெரும் பொங்கல் சிறப்பு வழிபாடு!
கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில், தை மாதம் ஒன்றாம் நாள் பெரும் பொங்கலை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு சந்திரசேகர் மற்றும்…
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் – 10ஆம் நாள் தீர்த்தவாரி!
திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 10ஆம் நாளை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
உத்தராயண புண்ணிய கால கொடியேற்றம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று 06.01.2026 (செவ்வாய்க்கிழமை) காலை, உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (03.01.2026) சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம். திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரம் ஆயிரம் கால் மண்டபத்தில் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01-01-2026) மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.
ஆருத்ரா தரிசனம்!
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் நாளை (03.01.2026) ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 02.01.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6:45 மணிக்கு தொடங்கி, 03.01.2026 (சனிக்கிழமை) மாலை 4:43 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.…
சொர்க்கவாசல் திறக்கும் விழா!
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நாளை (30.12.2025) காலை 7.00 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கும் விழா நடைபெறுகின்றது.
கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (19-12-2025) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான…
திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!
திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
பருவதமலை கிரிவலம்: கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் பங்கேற்பு!
கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் அற்புதமான கிரிவலம், நேற்று (16.12.2025) மார்கழி 1 (தனூர்) மாதப் பிறப்பு முன்னிட்டு நடைபெற்றது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத அமாவாசை பிரதோஷம்!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (17-12-2025) மார்கழி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.
மார்கழி 1 முன்னிட்டு நாளை பர்வதமலை கிரிவலம்!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தின் அமைந்துள்ள பர்வதமலை மார்கழி 1 (தனூர்) மாத பிறப்பு (16.12.2025) செவ்வாய்க்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். 4660…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 நிறைவு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025, இன்று (07.12.2025) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (06.12.2025) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கிரிவலம்!
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் இன்று (05.12.2025) கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 03 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (04.12.2025) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

