Web Analytics Made Easy -
StatCounter

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

நினைத்தாலே முக்தி தரும் திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருணாச்சலேஸ்வரரை தரிசித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சித்திரை வசந்த உற்சவம் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு அய்யங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ திருவீதி உலா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ 10-ம் நாள் திருவிழாவையொட்டி சாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 25ம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா துவங்கியது. அதனை தொடர்ந்து சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மூன்றாம் பிராகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடி மரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். மன்மத தகன நிகழ்ச்சிக்காக 20 அடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 9

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2023) ஒன்பதாம் நாள் இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், ஒன்பதுதலை இராவணன் வாகனத்தில் சுவாமியும் காட்சியளிக்கும் வீதி…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கொட்டும் மழையிலும் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2023) புதன்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கொட்டும் மழையை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (02.05.2023) செவ்வாய்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (03.05.2023) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 7

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை பிரம்மோற்சவ விழாவில் நேற்று (02.05.2023) ஏழாம் நாள் மாலை திருத்தேரில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்  (29.05.2023) சனிக்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில்  ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (01.05.2023) ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் காட்சியளிக்கும் வீதி உலா நடைபெற்றது. 

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்: • 4314 காவலர்கள் • கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள் • 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் • 1,160 பேருந்துகள் நிறுத்தும் வசதி •…

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 5

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (30.04.2023) ஐந்தாம் நாள் இரவு முஷிகம், மயில் ரிஷபங்கள் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (29.04.2023) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சித்திரை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.4) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.5) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 4

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (28.04.2023) வெள்ளிக்கிழமை நான்காம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 3

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் (28.04.2023) மூன்றாம் நாள் இரவு பூத விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2023) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்- Day 3

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் நேற்று (27.4.2023) வியாழக்கிழமை உற்சவ மூர்த்தி பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day1

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (26.04.2023) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.