மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா !
கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் குறள் வீடு உறவுகள் நடத்திய சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் திரு வேலுகலைச்செல்வன் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு குறள் வீடு உறவுகள் மூத்த உறவினர் திரு.பன்னீர் அவர்கள்,
போளூர் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. இரமேஷ் (SSHR) அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
போளூர் காவல் ஆய்வாளர் திருமதி கவிதா அவர்கள்,
குறள் வீடு உறவுகள் திருமதி தேவிகா முன்னிலை வகித்தனர்.
சிறந்த மாணவன் விருது பெறும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கி
திரு. ரமேஷ்,
திருமதி. கவிதா,
திரு. அசோக் குமார் ,
திரு. வாசுதேவன்,
திருமதி. ராஜகுமாரி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்
திரு. அசோக் குமார்
திரு. தங்கதுரை
திரு. வாசுதேவன்
திரு. சுரேஷ்
திருமதி. ராஜகுமாரி
திருமதி. மாரிலட்சுமி
சத்துணவு அமைப்பாளர் ஏழுமலை முதலானோர் கலந்து கொண்டனர்.