Web Analytics Made Easy -
StatCounter

பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்பணி!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் உள்ள பருவத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறையினருடன் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். பருவதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மரம்பிகை கோவிலில் நேற்று பௌர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அப்போது கிரிவலம் சென்ற பாதையில் குப்பையும், கூளமுமாகவும் இருப்பதால் அனைத்தையும் தூய்மைப்படுத்தினர்.

அறக்கட்டளையினர் தூய்மை பணி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *