Web Analytics Made Easy -
StatCounter

கற்றல் திறன்களை மேம்படுத்த போட்டிகள் : திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டிய ஆசிரியர்கள்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 3 - ஆம் வகுப்பு S.ஹேமஸ்ரீ மற்றும் T.ஜெசிதரன் இருவரும் தானியங்களின் ஓவியம் என்ற தலைப்பில் சிறப்பாக வரைந்தும், 5 - ஆம் வகுப்பு மாணவன் சால்புசெழியன் எண்களின் இட மதிப்பை அறிந்து கொள்ள ஆணிமணிச்சட்டம் செய்தும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக தங்கள் திறன்களை வெளிப்படுத்திய இம்மூன்று மாணவர்களையும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *