ஜவ்வாது மலையில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 30ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரும் அமைச்சருமான கே சி வீரமணி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நரியம்பட்டு ,சந்தமேடு உட்பகுதிக்குச் சென்று மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அப்போது மக்களிடம் அமைச்சர் கே சி வீரமணி பேசும்பொழுது மலைவாழ் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படச் சாலை வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, ஜவ்வாது மலைப்பகுதியில் தனி மாவட்டமாக அதிமுக உருவாக்கிக் கொடுத்துள்ளது. தொழில் கல்வி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று மக்களின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். மேலும் மலைக்கிராமங்களுக்குச் சிற்றுந்து இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கூறினார்