அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையிலும் நடைபெறும்.
கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 02nd)
Foods and Recipes That Help Heal Ulcers!!
Gold Rate Increased Today Morning (01.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 01st)
கிராம சபை கூட்டம்!!
சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
Anna Productions announces the grand trailer and audio launch of A.S. Mukundans "Madras Mafia Company"
