கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அணைகளின் கொள்ளளவு விவரம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அணைகளின் கொள்ளளவு விவரம் :-
சாத்தனூர் அணை:
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று.
இந்த அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும். தற்போது அணையில் 83.65 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 7321 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 1824 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
குப்பநத்தம் அணை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கு அடுத்ததாக மிகப்பெரிய அணையாக குப்பநத்தம் அணை விளங்குகிறது. செங்கம் அருகே உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 60 அடியாகும். தற்போது அணையில் 42.97 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 700 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 346.70 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
மிருகண்டாநதி அணை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை .
இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 7.71 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 21.036 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
செண்பகத்தோப்பு அணை:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதன் கொள்ளளவு 62.32 அடி உயரமாகும். தற்போது அணையில் 50.77 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 287 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 178.402 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.