Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் பற்றிய விவரம்!

இசைக்கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் பொருட்டும், இளைய சமுதாயத்தினரிடையே இசைக்கல்வியில் ஆர்வத்தினை ஏற்படுத்திடவும், மாணவர்களை புகழ்மிக்க இசைக்கலைஞர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் மாவட்ட இசைப்பள்ளிகள் இயக்கி வருகின்றன.

மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகள் இசைப்பள்ளி அளவில் நடத்தப்படும். மூன்றாம் ஆண்டில் அரசு தேர்வுத்துறையால் முதன்மைப் பாடம், துணைப்பாடம், வாய்மொழித்தேர்வு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது 17 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது.

3 ஆண்டுகள் certification course
1. குரலிசை
2. நாதசுரம்
3. தவில்
4. தேவாரம்
5. பரதநாட்டியம்
6. வயலின்
7. மிருதங்கம்

முகவரி :
திருவண்ணாமலை
சமுத்திரம் கிராமம்,
கிரிவலப் பாதை, செய்கம் ரோடு,
ரமனாஸ் ரமம் அஞ்சல்,
திருவண்ணாமலை - 606 603

தொலைபேசி எண்: 235545

கல்வித்தகுதி: 7 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 13 வயது முதல் 25 வயது வரை

கட்டணம்: படிப்புக் கட்டணம் இல்லை , சிறப்புக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ 120 செலுத்தவேண்டும். முதல் ஆண்டில் சேர்க்கை கட்டணமாக ரூ 2 மற்றும் பிணைத் தொகை ரூ 30 செலுத்த வேண்டும்.

பள்ளி வேலை நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 10 மணி முதல் 4 மணி வரை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை.

மேலும் விவரங்களை https://artandculture.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *