திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மாநாட்டில் கலசபாக்கம் ஒன்றியம் கோயில் மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள், மேலாண்மை குழு தலைவர் ரா.செல்வி மற்றும் தலைமையாசிரியர் சி.விருத்தாசலம் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் வட்டார கல்வி அலுவலர்கள் பா.ஜோதி மற்றும் ம.ரவி உடன் இருந்தனர்.
