◉ பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது.
◉ முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவூ 9 மணி வரையில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்விக்கி, சொமோட்டா போன்ற மின் வணிக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
◉ அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
◉ முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைக்கள் முழுவதுமாக மூடப்படுகிறது.
◉ காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
◉ ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
◉ மத்திய அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.
◉ வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
◉ 3000 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வணிக வளாகங்களில் இயங்கும், பலசரக்கு, காய்கறி கடைகளுக்கும் தடை தொடர்கிறது.
◉ தனியாககாய்கறி, மீன், இறைச்சி, மளிகை, பலசரக்கு கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
◉ தேநீர் கடைகள் பார்சல் சேவையுடன் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
◉ உள் மற்றும் திறந்த வெளி அரங்குகள், சமுதாயம், அரசியல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
◉ இறப்புசார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
◉ பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
◉ மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
◉ திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், மதுக் கூடங்கள், பொருள்காட்சி மற்றும் கேளிக்கை பூங்காக்கள் என எல்லாவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
◉ கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி கடைகள் செயல்பட தடை தொடர்கிறது.
◉ அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ◉ குட்முழுக்கு மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை.
◉ நீலகிரி, கொடைக்காணல், ஏற்பாடு போன்ற அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
◉ மாநிலத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்கள், அருங்காட்சியம் என அனைத்தும் மூடப்படுகிறது.
◉ மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
◉ முழு ஊரடங்கின் போது, உணவு விநியோகம், மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர, அனைத்து மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
◉ பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.
◉ வங்கிகள், தனியார் பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Recent News:
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை தொடக்கம்!
Gold Prices Rise by Rs 320 per Sovereign in Chennai
Auspicious (Nalla Neram) time today (Nov 03rd)
Auspicious (Nalla Neram) time today (Nov 02nd)
Foods and Recipes That Help Heal Ulcers!!
Gold Rate Increased Today Morning (01.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 01st)
