Web Analytics Made Easy -
StatCounter

விவசாயிகள் ஒன்றுகூடல் – கலசபாக்கம்

5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும் உறுதிபூண்டனர்.

👉🏻 முன்னோர்கள் வழிமுறைகளை பின்பற்றுவது,
கால்நடை எரு, தழை, பிண்ணாக்கு, கிடை மடக்குதல் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்குதல்.

👉🏻 பாரம்பரிய விதைகளையே தேர்வு செய்ய வேண்டும்.

👉🏻 விளைநிலங்களை மலடாக்கும் இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லியை அறவே கைவிட வேண்டும்.

👉🏻 விளை நிலத்தை சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்க வேண்டும். பட்டத்தில் மட்டும் பயிரிட வேண்டும்.

👉🏻 மரம் வளர்த்து – மண்ணை வளப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *