கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் குப்பநத்தம் மற்றும் மிருகண்டா அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளிலிருந்தும் உபரி நீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் இரு கரைகளிலும் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.