கலசபாக்கம் தபால் நிலையத்தில் தபால் அட்டைகள், தபால் கடிதங்களும் தட்டுப்பாடு நீங்க உடனடி நடவடிக்கை!
பொதுமக்களிடம் கிடைத்த தகவலின்படி கலசபாக்கம் தபால் நிலையத்தில் போதுமான தபால் அட்டைகள், தபால் கடிதங்களும் இல்லாததை நாங்கள் அஞ்சலக மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சற்று நேரத்திலேயே மீண்டும் எங்களை அழைத்து தேவையான தபால் அட்டைகள், தபால் கடிதங்களும் திருவண்ணாமலை வந்தடைந்ததாகவும்.இன்னும் ஓரிரு நாட்களில் கலசபாக்கம் அஞ்சல் அலுவலகத்தில் தட்டுபாடு நீங்கி, தொடர்ந்து கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அவரின் உடனடி நடவடிக்கைக்கு கலசபாக்கம்.காம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.