சுவாமி பூண்டி மகான் அவர்கள் 1978 ஐப்பசி மாதம் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி மகான் அவர்களுக்கு சுப்ரமணிய சுவாமி அவர்கள் பணிவிடை செய்து வந்தார். சுவாமி மகான் அவர்கள் 19 வருட காலமாக திண்ணையிலேயே அமர்ந்து தவம் செய்தார். இவர் இமயமலை சென்று இருக்கிறார். திருவண்ணாமலை கோயில் கட்டும் போது கல் எடுத்து கொடுத்திருக்கிறார். இவர் அனைத்து மொழிகளையும் அறிந்தவர். இவர் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என எல்லா திசைகளுக்கும் சென்றிருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு சுவாமி மகான் அவர்கள் திருநீர் எடுத்து கொடுத்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதேபோல் திருமணம் ஆகாதவர்கள், வேலை இல்லாதவர்கள் இது போன்ற அனைத்து வேண்டுதல்களும் இவர் தரிசனம் கிடைத்தால் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இவர் காசு, பணம் ஆகியவற்றை விரும்பாதவர்.
Recent News:
Gold Rate Increased Today Morning (05.09.2025)
Important facts about egg allergy we must all know without fail!!
Auspicious (Nalla Neram) time today (Sep 5th)
ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு!
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை!
இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!
Gold Rate Decreased Today Morning (04.09.2025)