கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் 1430 பதவிக்கான வருவாய் தீர்வாயம் திருவண்ணாமலை கலெக்டர் பி முருகேசன் இன்று நடைபெற உள்ளது.
இன்று கலசபாக்கம் உள்வட்டம், நாளை 22ஆம் தேதி கடலாடி உள்வட்டம், 23ஆம் தேதி கேட்டவரம்பாளையம் உள்வட்டம் மேற்கண்ட மூன்று நாட்களுக்கு வருவாய் தீர்வாயம் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
மனுக்கள் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வராமல் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையம் மற்றும் கணினி மையங்களில் ஆன்லைன் மூலம் 1.7. 2021 முதல் 31. 07. 2021 வரை பதிவு செய்து பயன்பெறுமாறு வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.