கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று (08.04.2025) வியாழக்கிழமை, பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாவது நாளை முன்னிட்டு திருத்தேர் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, “அரோகரா” என முழக்கமிட்டபடி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக, ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்27 நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய தனிச்சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் ஒருமுறை தரிசனம் செய்தாலே, அனைத்து நட்சத்திர கோவில்களிலும் தரிசனம் செய்ததற்குத் தகுந்த பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.