கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவிகள் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. வேலுகலைச்செல்வன் பாராட்டி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் அசோக்குமார்,தங்கதுரை, வாசுதேவன் துரைமுருகன், சுரேஷ், இராஜகுமாரி,ஜோதி,கேத்தரின்மேரி மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.
						