கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில் வரவழைத்து ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் துறைவாரியாகக் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .
- • கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில் வரவழைத்து ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் துறைவாரியாகக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார் .
- • கலசபாக்கம் வட்டாட்சியர் அவர்களுடன் நிவாரண முகாம்கள் அமைப்பது குறித்தும், அங்குத் தங்க வைப்பதற்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்யத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை.
- • பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் பேசி தொகுதியிலுள்ள அனைத்து ஏரி குளங்கள் மற்றும் அதன் உறுதி தன்மை குறித்து ஆலோசனை நடத்தி,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகளை கைவசம் வைத்தல் போன்ற அறிவுரைகள் வழங்கினார் .
- • காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவற்றைத் தயார் நிலையில் வைக்க அறிவுரை வழங்கி, மின்சாரத்துறை உடனுக்குடன் தேவைகளைக் கண்டறிந்து பணியாற்றப் பிரத்தியேகமான தொலைப்பேசி எண்களைப் பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி அலுவலர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக உதவி மையம் அமைத்துச் செயல்பட நடவடிக்கை .
- • ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் கலசபாக்கம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்த நமது சட்டமன்ற உறுப்பினர்.
- • உணவு வழங்கல் துறை , வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அதிகாரிகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி நிவாரண முகாம்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் தேவையான உதவிகளையும் உடனுக்குடன் வழங்கத் தேவையான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை.
- • பொதுப்பணித்துறை மழைநீர் ஓட்டப் பாதைகளைக் கண்டறிந்து ஜேசிபி மற்றும் ஆட்களின் உதவியுடன் தண்ணீர் ஊருக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
- • கலசபாக்கம் தொகுதியின் தாழ்வான பகுதிகளைப் பகுதிகளான ஆதமங்கலம் புதூர், பட்டியந்தல் போன்ற கிராம பகுதிகளையும் மிகப்பழமையான வீடுகளில் வசிப்பவர் களையும் நிவாரண முகாம்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கினார்.
- • கழிவுநீர் தேக்கத் தொட்டிகளையும், அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி மழை நீரோடும் குடிநீருடன் கலந்துவிடும் பெரும் அபாயம் இருப்பதால், கழிவுநீர் தொட்டிகளைத் தனிக் கவனத்துடன் கவனித்துத் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார் .மேலும் வினாடிக்கு வினாடி, நிமிடத்திற்கு நிமிடம் தனக்குத் தகவல்கள் வந்து சேர வேண்டும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உதவி அலுவலகங்களுக்கு நிலவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்த அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்
- • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் விரிவாக கலந்து பேசி, சாலையோரம் இருக்கும் மரங்களின் உறுதித் தன்மையையும், ஒருவேளை இந்த சூறாவளி புயலால் மரங்கள் சாலையில் சாய்ந்தால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் ஆட்களைத் தயார் நிலையில் வைக்க அறிவுரை வழங்கினார்.
- • முன்னதாக சூறாவளி புயல் நிவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செண்பகத்தோப்பு அணையை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டுத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கினார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 02nd)
Foods and Recipes That Help Heal Ulcers!!
Gold Rate Increased Today Morning (01.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 01st)
கிராம சபை கூட்டம்!!
சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
Anna Productions announces the grand trailer and audio launch of A.S. Mukundans "Madras Mafia Company"








