Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா நடைபெற்ற பிறகு இரவு கோவிலில் நடந்த கந்த சஷ்டி திருவிழாவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *