சுபக்ருத் வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (03.06.2022) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர், நூதன ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 9.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள், ஊத்துக்காடு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் நடைபெறும்.