Web Analytics Made Easy -
StatCounter

மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா – 33 ஏக்கரில் உருவான முக்கிய சிறப்பம்சங்கள்

திருவண்ணாமலை–திருக்கோவிலூர் சாலையில், எடப்பாளையம் ஏரியை மையமாகக் கொண்டு 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் உயர்வை ஊக்குவிக்கும் அமைப்புகளுடன், வில்நாண் வடிவ ஒளிவிளக்குப் பாலம், 2 கி.மீ. நீள ரெஃப்ளெக்சாலஜி நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி சாதனங்கள், நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலர்ச் செடிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இசையுடன் நடைபயிற்சி மேற்கொள்ள ஒலிபெருக்கிகள், ஓய்வுக்கான நிழற்குடைகள், கண்காணிப்பு கேமராக்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன கழிவறைகள் போன்ற வசதிகளும் உள்ளன.

இந்த பூங்கா சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் முக்கியமான பொதுமக்கள் பயன்பாட்டு இடமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *