Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாச்சியார் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தின விழா!

கலசபாக்கம் பகுதியில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணியை கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாச்சியார் அவர்கள் துவக்கி வைத்தார். பிறகு மாணவர்களும், அரசு ஊழியர்களும் வாக்காளர் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

வாக்காளர் உதவியை செயலி மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் அல்லது உங்கள் வாக்குசாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

படிவம் 6: வாக்காளர் பெயர் சேர்த்தல்
படிவம் 6A : வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்த்தல்
படிவம் 6B : வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தல்
படிவம் 7: நீக்கம் செய்தல்
படிவம் 8: திருத்தும் செய்தல் / முகவரி மாற்றம் / தொகுதி மாற்றம் / மாற்று EPIC கார்டு பெறுதல் / மாற்றுத்திறனாளி என குறிப்பதற்கு

மேலும் https:// www nvsp.in அல்லது வாக்காளர் உதவி செயலி (Voter Helpline App) - VHA என்ற இணையதளத்தின் மூலம் ஆதார் எண்ணை நேரடியாக இணைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *