Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் பனை விதை விதைக்கும் பணி தொடங்கப்பட்டது!

கலசபாக்கம் ஏரிக் கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 2 ஆயிரம் வேம்பு, புங்கன் விதைகள் நடப்பட்டன. இதனை ஒருங்கிணைப்பாளர் ப.தி.ராஜேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ப.ரஞ்சித், எஸ்.ஆனந்தன், வைகுந்தவாசன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்துகொண்டு நட்டனர்.

திரு இராஜேந்திர ஐயா கூறுகையில்,

கலசபாக்கம் ஏரிக்கரை முழுவதும் சீமகரிவேல் முல்லை அகற்றியதால் கிராம பொதுமக்கள் சார்பில் பனை விதைகளும், விதைபந்துகள் பொதுமக்கள் ஆதரவோடு நடைபெற்று வருகிறது. இதில் 3000 பன விதை பந்துகள் விதைக்கப்பட்டது. மேலும், சீதா மரம் மற்றும் விலா மரங்கள் நடவு செய்ய முற்சித்துளோம். இதற்காக ஒத்துழைத்த ஊராட்சிமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பனைவிதையை நடுவதன் மூலம் நீர்வளத்தை அதிகபடுத்தும் எதிர்காலத்தில் உணவு தேவையும் ஆலமரத்தில் பால் உருவாக்க உதவக்கூடியது பனைமரம். பறைவைகள் விதைபரவளுக்காக பனைமரங்கள் உதவி செய்கின்றது. நீர்வளத்தை அதிகப்படுத்த கரையை பலப்படுத்த மற்றும் மக்களுக்கு கூடை பின்னலுக்கும், பல பொருட்கள் செய்வதற்கும் உதவுகின்றது. அதைப்போல கார்த்திகை தீபத்திற்கு மாவலிக்காக பனம் பூவும், பன ஓலையும், நிறைய எரிபொருளும் பனைமரம் தந்து உதவுகிறது. மேலும்,
இயற்கையான பனங்கிழங்கு, கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு அதிக குளிர்ச்சி தரும் நுங்கு வருங்கால தலைமுறைக்கு பரிசளிப்போம்.

பனைமரத்தை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை

பனைமரம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது எனவே, பனைமரத்தை பாதுகாப்போம் எதிர்கால உணவை பூர்த்தி செய்வோம்.

ஜே பி ஃபார்மில் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துகள் கலசபாக்கம் ஏரிக்கரையில் விதைக்க கொடுக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *