நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்!
நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் சமீபத்தில் கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, உள்ளூர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சியின் போது, மாணவர்கள் மற்றும் இளம் பங்கேற்பாளர்களுடன் அவர் பங்கேற்று, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விளக்கங்களை வழங்கினார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரு ஜி. பிரதீப்பின் பயணம் மற்றும் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளை அடைய வழிவகுத்த உத்திகள் மற்றும் மனநிலையைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
திரு.ஜி.பிரதீப் அவர்கள் நமது கலசப்பாக்கம் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.ஞானசம்பந்தரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.