Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாராட்டு!

இங்கு வரும் நோயாளிகளும், வயதானவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் சிறப்பான சேவை கிடைப்பதாகவும் தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் ஆகியவற்றை தக்க அறிவுரைகளுடன் மருத்துவர்களும், செவிலியர்களும், மருந்தாளுனர்களும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வாரம் இரவு, கலசபாக்கத்தில் வசிக்கும் பொது மக்களில் ஒருவர் கூறியதாவது: அவர் குடும்பத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நடு இரவில் திடீரென வலி ஏற்பட்டதனாலும் அவசரமாக எங்கு செல்வது என்று தெரியாமல் அரசு மருத்துவமனையை அணுகிய போது, உடனடியாக அங்கிருந்த செவிலியர் மருத்துவரை அழைத்து அவர்கள் இணைந்து தேவையான சிகிச்சையை அளித்ததுடன் தேவையான மருந்துகளையும் கொடுத்து சிறப்பான மருத்துவம் பார்த்ததாக மனநிறைவுடனும், மனமகிழ்ச்சியாகவும் தெரிவித்தார்.

அங்கு இருக்கின்ற உதவியாளருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மேலாக ஒரு சிறப்பான மருத்துவ சேவை வழங்கி வரும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் உதவியாளர்களையும் கலசபாக்கத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் மனதார பாராட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *