நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி காலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு 2500 பேர் மட்டும் அனுமதி.
-
- • மலையேறும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையின் நகலை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம்.
- • டிசம்பர் 6 தீப விழாவின் போது காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும். 2500 பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்படுவார்கள்.
- • பே கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலையேற அனுமதி மற்ற வழிகளில் ஏற கண்டிப்பாக அனுமதி இல்லை.
- • கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை மலையில் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
- • அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே நெய் ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய் தீபம் ஏற்றக்கூடாது.
- • பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி. காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் அறிக்கை வெளியீடு.
Recent News:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!
Waiting Costs the Most in Business By J Sampath, Founder and CEO of JB Soft System
Feeling too hot in the summers can be due to these reasons!!
Dr. Dhanajeyan Jayavel Honored with Physio-Entrepreneur Award at Karnataka Physiocon 2025
TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!
Reasons why we must avoid eating rice for dinner & healthier alternatives to eat during dinner?
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!