Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (16.11.2022) மாலை நடை திறப்பு!

சபரிமலையில் உள்ள பழமையான ஐயப்பன் கோவிலில் நடைபெறும் காத்திகை மாத மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை புகழ்பெற்றவை. இதற்காக இன்று (16.11.2022) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் தற்காலிக முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

நாளை தொடங்கும் மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்படும் கோயில் நடை, ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் 13,000 பேர் 6 கட்டங்களாக பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. உணவு, மருத்துவம் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *