Web Analytics Made Easy -
StatCounter

காஞ்சி- சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Kanchi- Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன், சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள்.

கடலாடி- சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Kataladi- Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

செய்யாற்றின் வடக்கரையில் அமைந்த சப்த கரை கண்ட தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திருநாமம் "வன்னீஸ்வரர்" என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.

மாம்பாக்கம் - சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Mambakkam - Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

சப்த கரை கண்ட தலங்களில் மூன்றாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் "கரைகண்டேஸ்வரர்" தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என இந்தக் கோவில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார்.

தென்மகாதேவமங்கலம் - சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Thenmagadevamangalam - Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

சப்த கரை கண்ட தலங்களில் நான்காவது தலம். இத்தலமானது போளூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாதிமங்கலம் எனப்படும் "தென்மகாதேவமங்கலம்".

எலத்தூர்- சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Elathur- Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும்.

பூண்டி - சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Poondi - Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

சேயாற்றின் வடக்கரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். இத்தலமானது போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் தான்.

குருவிமலை - சப்த கரை கண்ட சிவ ஆலயம்(Kuruvimalai - Sapta Karai Kanda Shiva Temple)- கலசபாக்கம்

காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு "குரு மூலை" என்று பெயர். இதுவே காலப்போக்கில் 'குருவிமலை' ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த கரை கண்ட தலங்களில் 7வது தலமாக அமைந்துள்ளது.

தொடர்பு கொள்ள