இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி !
இலக்கில்லாத பயணத்தில் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை; அதுபோல இலக்கு நிர்ணயிக்கப்படாத வாழ்க்கையும், வாணிபமும் எந்த முன்னேற்றமும் காண்பதில்லை.
இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி. எத்தனை தூர பயணம் ஆயினும் முதல் அடி எடுத்துவைப்பதில் தொடங்குகிறது பயணம்.
இலக்கை நோக்கி நகர்தல் தொடரும்போது இலக்கை அடைவது இயல்பாய் நிகழுகிறது.
நேற்று (29.01.2022) அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், பயிற்சி எடுப்பவர்களுக்கும், கலசப்பாக்கம் மட்டும் கலசபாக்கத்தை சார்ந்த குழந்தைகளுக்கும் இலக்கை நிர்ணயிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சி பயிற்சியுடன் நடைபெற்றது.